சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
EXCLUSIVE
ஒப்புதலுடன் தேதி கொடுத்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து மிகப் பிரம்மாண்டமான அளவில் திரைபடம் தயாரிக்க சித்தமாக உள்ளேன். திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான சேலத்தை சேர்ந்த வேங்கை அய்யனார் பேட்டி.
சேலம் மாவட்டம் மல்லுரை சேர்ந்தவர் வேங்கை அய்யனார். இவர் அரசியல், பஞ்சாயத்து தலைவர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டு விளங்கினாலும் திரைப்படங்களை தயாரிப்பதும் அதில் நடிப்பதையும் தொழிலாக கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி வெட்டு என்ற திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரித்ததுடன் அதில் நடிக்கவும் செய்துள்ளார். இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் p மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாராகியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று தமிழகம் உட்பட உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. உலக ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கூலி திரைப்படம் குறித்து சேலத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான வேங்கை அய்யனார் அவர்களிடம் கேட்டபோது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் மிக பிரம்மாண்ட அளவில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், திரைப்பட தயாரிப்பாளர் என்ற முறையில், எடுத்த எடுப்பில் ஒப்புக்கொள்வாரா என்பது தெரியவில்லை என்றும் ஒருவேளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்து தேதி வழங்கினால் அவரை வைத்து மிகப் பிரம்மாண்ட அளவில் திரைப்படம் தயாரிக்க தயாராக உள்ளதாகவும், சேலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அதாவது சேலத்தை சேர்ந்த தயாரிப்பாளர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து திரைப்படம் தயாரித்தார் என்ற பெருமையை சேலத்திற்கு உருவாக்கி தருவேன் என்றும் நம்பிக்கையுடன் சூப்பர் ஸ்டாரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் தங்களது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் என்டர் தி டிராகன் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தற்பொழுது மழைக்காலம் என்பதால் வெளிச்சம் பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சீதோசன நிலை மாறிய பிறகு விரைவில் திரைப்படம் தயாரிப்பு பணி தொடங்கும் என்றார்.
அதுமட்டுமல்லாமல் தங்களது நிறுவனத்தின் சார்பில் கிராம கோடாங்கி என்ற திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளதாகவும் இந்த திரைப்படத்தினை கஸ்தூரிராஜா இயக்கி நடிப்பத்துடன் தானும் அந்த திரைப்படத்தில் நடிக்கப் போவதாக குறிப்பிட்ட வேங்கை அய்யனார், முற்றிலும் கிராம பாங்கான கதை அம்சம் கொண்ட திரைப்படம் இது என்றும் இதற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று கொண்டிருப்பதாகவும், இந்தியாவையே புரட்டிப் போடும் வகையில் மிகப்பிரமாண்ட முறையில் தயாரிக்கப்படும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சேலத்தில் பட பூஜையுடன் பட தயாரிப்பு தொடங்க உள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே விஜய் நடித்துள்ள சர்க்கார் திரைப்படத்தில் வரும் ஒரு விரல் புரட்சியே பாடலில் தான் நடித்துள்ளதாகவும் அதுமட்டுமில்லாமல் வெட்டு என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளதாகவும், கரா என்ற திரைப்படத்தில் தாதா வேடத்தில் நடித்துள்ளதாகவும் அந்த திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளதாகவும் தெரிவித்ததோடு, இந்திய அளவில் மிகச்சிறந்த கதை அம்சத்துடன் கூடிய திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்பது மட்டுமே தனது எதிர்கால லட்சியம் என்றும் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான சேலத்தைச் சேர்ந்த வேங்கை அய்யனார் தெரிவித்துள்ளார். சேலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான வேங்கை அய்யனார் அவர்களின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் கனவு நனவாக நாமும் வாழ்த்துவோம்.

0 coment rios: