சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக தமிழக முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட தாயுமானவர் திட்டத்தை, முதியவர்களின் இல்லம் தேடி சென்று நிறைவேற்றிய சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்ட பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் தாயுமானவர் திட்டத்தை பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி மற்றும் தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் கூட்டுறவு செயலாற்றியர் சுமதி மற்றும் கூட்டுறவுத்துறை சார் பதிவாளர் முகாம்பிகை அவர்களுடன் சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், பனமரத்துப்ப ஒன்றிய திமுக செயலாளர் உமாசங்கர், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் காட்டூர் சங்கர், ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம், முன்னாள் சேர்மன் பழனி, ஒன்றிய மகளிர் அணி துணைத் தலைவர் திருமதி வசந்தி சுப்ரமணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக தேடிச் சென்று வயது முதிர்ந்தவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் குடிமை பொருட்களை வழங்கினர். இதே போல கம்மாளப்பட்டி பனமரத்துப்பட்டி மல்லூர் கஜல் நாயக்கன்பட்டி சின்ன கொண்டலாம்பட்டி மற்றும் பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படக் கூடிய இலவச அரிசி உட்பட பருப்பு சர்க்கரை பாமாயில் உள்ளிட்டவைகள் இளம் தேடி வந்து கொடுத்தது தாங்கள் பெற்றுக்கொண்டது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றும் வீடு தேடி கொடுத்து உதவிய தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளை முதியவர்கள் மற்றும் மாற்றுத் தறனாளிகள் தெரிவித்துக் கொண்டனர்.

0 coment rios: