சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
கஜமுகன் அவதரித்த தினம். சேலம் செவ்வாய்பேட்டையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட புலியின் மீது அமர்ந்து வரும் மணிகண்ட விநாயகர்.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. முக்கிய திருக்கோவில்களில் உள்ள விநாயகப் பெருமானுக்கும் இதே போல வீதிகள் தோறும் சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதன் ஒரு பகுதியாக சேலம் செவ்வாய்பேட்டை எலைட் அசோசியேஷன் சார்பில் ஆண்டுதோறும் மிகப் பெரிய பொருட்செலவில் மிகப்பிரமாண்டமான முறையில் விநாயகர் சிலை பல்வேறு கான்செப்ட்களில் அமைக்கப்பட்டு பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படுவது வழக்கம்.
இதன் தொடர்ச்சியாக 45 ஆவது ஆண்டு படைப்பாக வனப்பகுதியில் விநாயகப் பெருமான் புலி மீது அமர்ந்து வில் அம்பு ஏந்தி வருவது போல மிக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளதாகவும் இந்த மூன்று நாட்களும் பள்ளி குழந்தைகளில் பரதம் உள்ளிட்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளதாக எலைட் அசோசியேசன் செயலாளர் சுவாதி சேகர் நம்முடைய தெரிவித்தார். இன்று மாலை முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட உள்ளது என்றாலும் கூட ஆண்டு தோறும் இந்த அமைப்பின் சார்பில் மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்படும் விநாயகர் அமைக்கும் பணியின் போது அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கண்டு களித்து சென்ற வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: