சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் சிந்தி இந்து அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கியது.
தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக விரிவு படுத்தப்பட்ட இந்த திட்டத்தினை சேலம் சிறுமலர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தாதேவி ஆகியோர் செயல்படுத்தினர். இதன் ஒரு பகுதியாக சேலம் நாராயண நகர் பகுதியில் சுமார் 76 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்தி இந்து அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில், தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி லதா தலைமையில் நடைபெற்ற பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவக்க விழாவில், பள்ளியின் தாளாளர் நரேஷ் கிங்கர், கமிட்டி தலைவர் ராம்சந்த் கிங்கர், செயலாளர் ரமேஷ் லால் பதீஜா மற்றும் பொருளாளர் தீபக் பதீஜா ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்ததுடன் காலை சிற்றுண்டி உண்ணாமல் வந்த பள்ளி குழந்தைகளுக்கு தங்களது கரங்களால் சிற்றுண்டியை வழங்கி மகிழ்ந்தனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் உணவு உட்கொண்டு கொண்டிருந்த மாணவ மாணவிகளிடம் உரையாற்றும் போது, தமிழக முதலமைச்சர் அவர்களால் விரிவுபடுத்தப்பட்ட இந்த திட்டம் நமது பள்ளியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் வீட்டில் உணவு உட்கொள்ள முடியவில்லை என்றாலும் பள்ளியில் உணவு உட்கொண்டு பிறகு நன்கு படித்து பள்ளிக்கு நல்ல பெயரையும் பெருமையையும் பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். தொடக்கத்தில் அரசு பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டமானது தற்பொழுது அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது பெற்றோர்களிடையேயும் மாணவ மாணவிகள் இடையேயும் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது.
0 coment rios: