திங்கள், 25 ஆகஸ்ட், 2025

ஆயுஷ்மான் பாரத் ஆகிய திட்டங்களை காலம் தாழ்த்தாமல் முழுமையாக செயல்படுத்த வேண்டும். சேலம் மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

ஆயுஷ்மான் பாரத் ஆகிய திட்டங்களை காலம் தாழ்த்தாமல் முழுமையாக செயல்படுத்த வேண்டும். சேலம் மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு. 

சேலம் மாநகர் மாவட்ட பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமையில் பாஜக நிர்வாகிகள் கிருஷ்ணராஜ் காளிமுத்து முருகராஜ் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுப்பதற்காக வந்திருந்தனர். அந்த மனுவில் பாரத பிரதமரால் கொண்டுவரப்பட்ட ஏழைகளின் கனவு திட்டங்கள் ஆன ஆகாஷ் யோஜனா மற்றும் ஆயுஷ்மான் பாரத் ஆகிய திட்டங்களை தற்பொழுது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் ஏழை எளிய மக்களின் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். ஆகாஷ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு கட்டிக் கொள்ள பயனாளிகளுக்கு மானிய தொகை ஓராண்டு காலமாக சென்றடையவில்லை ஆயுஷ்மான் பாரத் திட்டமான மருத்துவ காப்பீடு திட்டமும் தனியார் மருத்துவமனையில் பயனாளிகளுக்கு மருத்துவம் செய்து கொடுக்க முன்வருவதில்லை இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாரத பிரதமரால் கொண்டுவரப்பட்ட திட்டத்தை வேண்டும் என்று புறக்கணிக்கப்படுவதாக பொதுமக்களின் வாயிலாக தெரிய வருகிறது. எனவே இந்த திட்டங்களை ஏழை எளிய மக்கள் பயனடைய வேண்டி சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மூலமாக பயனாளிகள் பயனடைய வேண்டும் என்பதை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதே போல சேலம் மாநகராட்சியின் கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட ஜாதகப்பட்டி அம்பாள் ஏரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் இரவு நேரங்களில் எரியாதது சம்பந்தமாக பொது மக்களின் சார்பாக பாஜகவினர் சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: