சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் அரசு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மண்டல உதவி இயக்குனர் பதவி. முக்கிய பிரமுகர்கள் இசை கலைஞர்கள் வாழ்த்து.
சேலம் அரசு இசைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சங்கரராமன். கடந்த 27 ஆண்டுகளாக இவரின் இசைப்பள்ளி சேவையை பாராட்டி கௌரவிக்கும் விதமாக தமிழக அரசின் கலை பண்பாட்டு மையத்தின் சேலம் மண்டல உதவி இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனை அடுத்து சேலம் ஆவின் பால் பண்ணை எதிரே உள்ள சேலம் அரசு இசைப்பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியரும் தற்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள உதவி இயக்குனர் ஆன சங்கரராமன் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சேலம் மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், சேலம் மாநகரின் முக்கிய பிரமுகர்களான ராசி சரவணன் மற்றும் தாரை குமரவேல் உள்ளிட்ட பலருடன் பள்ளியின் இசை ஆசிரியர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் ஆகியோர் புதிதாக பொறுப்பேற்றுள்ள உதவி இயக்குனர் சங்கர் ராமன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது குறித்து சேலம் மண்டல கலை பண்பாட்டு மையத்தின் உதவி இயக்குனராக பொறுப்பேற்றுள்ள சங்கரராமன் நம்மிடையே கூறுகையில், இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என்றும் இதற்காக தமிழக முதலமைச்சருக்கும் கலை பண்பாட்டு துறையின் இயக்குனர் அவர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும், இசைக் கலைஞர்களுக்கு என தமிழக அரசின் சார்பில் ஏராளமான நல்ல பல திட்டங்கள் உதவிகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருவதாகவும் அது அனைத்து கலைஞர்களுக்கும் முறையாக சென்று சேர வழிவகை மேற்கொள்ளப்படும் என்றும் அரசு இசைப்பள்ளியில் பயின்ற மாணாக்கர்கள் பலர் தற்பொழுது பல்வேறு அரசு பள்ளிகளில் இசை ஆசிரியர்களாக பணியாற்றி வருவதாகவும் இதே போல தனியார் துறையில் அவர்களுக்கான பணி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதே தனது கனவு லட்சியமாக உள்ளது என்றார்.
0 coment rios: