சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பனமரத்துப்பட்டி பேரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி பேரூர் , ஒன்டிக்கடை சமுதாய கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை வட்டாட்சியர் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர் அலுவலர்களுடன் சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற முகாமில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, பெண்களுக்கான மாதாந்திர உரிமை தொகை உட்பட ஏராளமான கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முகாமில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விண்ணப்ப மனுவை வழங்கினர். தொடர்ந்து நடைபெற்ற முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படக் கூடிய நல உதவிகளுக்கான அரசு ஆணைகளை சேலம் மாவட்ட கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த முகாமில் 36 அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து படம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரல் மனு வழங்கிய மக்கள் மகிழ்வுடன் தமிழக முதலமைச்சர் ககு தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர். பல்வேறு நல உதவிகள் தொடர்பாக இந்த முகம் நடைபெற்றாலும் பெண்களுக்கான உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை அதிகப்படியாக பெறப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திமுக பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் உமாசங்கர், பேரூர் கழக செயலாளர் ரவிக்குமார், பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரி வரதராஜன், துணைத் தலைவர் பிரபு கண்ணன், அவைத் தலைவர் பி எஸ் பார்த்திபன், தொண்டரணி அமைப்பாளர் தீபா, வார்டு கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், கட்சியின் கிளை செயலாளர்கள், சார்பணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: