சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் அவர்களிடம் நடிகர் விஜய் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டப்படும். தேசிய தலைவர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் நாகா. அரவிந்தன் சேலத்தில் கடும் எச்சரிக்கை.
நேற்றைய தினம் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தினுடைய கூட்டத்திலே பேசிய கட்சியினுடைய தலைவர் நடிகர் விஜய் அவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும் பொது மேடைகளில் பொதுக்கூட்டத்திலே எவ்வாறு பேச வேண்டும் என்று சிறிதளவும் தெரியாமல் இன்றைய தினம் கட்சி ஆரம்பித்து, நான் தலைவன் என்று உலறிக் கொண்டிருக்க கூடிய விஜய்க்கு எங்களுடைய தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பு சார்பிலே கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பொதுக் கூட்டத்திலே பேசத் தெரியாமல் கடந்த 40, 45 அன்று ஆண்டு காலமாக அரசியல் வரலாற்றிலேயே தனக்கென ஒரு அங்கீகாரமாக இன்றைய தினம் தமிழகத்தின் முதலமைச்சர் திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் ஸ்டாலின் அவர்களை நாவடக்கம் இல்லாமல் அங்கிள் அங்கிள் என்று பேசி இன்றைய தினம் தமிழக மக்களினுடைய கொந்தளிப்புக்கு காரணமாகி உள்ள விஜய் அவர்கள் உடனடியாக ஸ்டாலின் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் சார்பில் நடிகர் விஜய் மீது கைது செய்ய வேண்டி வலியுறுத்தி தமிழக முழுவதும் நாங்கள் தமிழக டிஜிபி இடம் நேரில் புகார் மனு தருவோம் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் விஜயகாந்த் அவர்கள் கூட மரியாதையாக தான் அனைவரையும் பேசி இருக்கின்றார். ஆனால் இப்படிப்பட்ட தமிழ்நாட்டிலேயே பாரம்பரிய கட்சியை வளர்த்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் கூட அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களை கூட அம்மையார் என்று தான் பேசிய வரலாறு இந்த தமிழ்நாட்டில் இருக்கின்றது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டிலே இன்றைய தினம் தமிழகத்தில் உளறிக் கொண்டிருக்கக்கூடிய விஜய் அவர்கள் உடனடியா நேற்று பேசிய தமிழகத்தினுடைய முதலமைச்சரை அங்கிள் அங்கிள் என்று பேசிய வார்த்தை திரும்பி பெறவேண்டும். விஜய் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்த நேரத்திலே நாங்கள் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பு சார்பிலே வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம். மேலும் அவர் இதுபோன்று இனிவரும் கூட்டங்களிலோ இல்ல மாநாடு இவ்வாறு பேசினால் 2026 நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விஜய் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படுவோம் என்று இந்த நேரத்திலே நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம் என தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் டாக்டர் நாக அரவிந்தன் சேலத்தில் மிகக் கடுமையான எச்சரிக்கையை பதிவு செய்துள்ளார். தங்களது அமைப்பின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக நடிகர் விஜயின் உருவப்படத்தில் வாயில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடன் அமைப்பின் நிர்வாகி ஓஷோ முரளி உடன் இருந்தார்.
0 coment rios: