புதன், 20 ஆகஸ்ட், 2025

சேலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயிலில் வசந்த மண்டபம் மற்றும் வாகன பூஜை மண்டப திறப்பு விழா. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் பங்கேற்று பக்தர்களுக்கு அர்ப்பணிப்பு.

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

சேலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ  ராஜகணபதி திருக்கோயிலில் வசந்த மண்டபம் மற்றும் வாகன பூஜை 
மண்டப திறப்பு விழா. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் பங்கேற்று பக்தர்களுக்கு அர்ப்பணிப்பு.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் சேலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ  அருள்மிகு ராஜகணபதி திருக்கோயிலில் வசந்த மண்டபம் மற்றும் வாகன பூஜை மண்டப திறப்பு விழா கோலாகலமாக நடைப்பெற்றது.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர்  இரா.இராஜேந்திரன் அவர்கள் தலைமையிலும் சேலம் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன் மற்றும் திருக்கோவலின்  அறங்காவலர் குழுத்தலைவர்  வள்ளியப்பா அவர்கள் முன்னிலையிலும் அருள்மிகு ஸ்ரீ  ராஜகணபதி திருக்கோயில் வசந்த மண்டபம் மற்றும் வாகன பூஜை மண்டப திறப்பு விழா நடைப்பெற்றது. முன்னதாக வசந்த மண்டபத்தில் கலச பூஜையும் பின்னர் சோனா கல்வி குழுமத்தாரின் சொந்த செலவில் புதிதாக சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வசந்த மண்டபத்திற்கு திருக்கோவிலின் குருக்கள் குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனைகள் காட்டப்பட்டு பக்தர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 
இந்த நிகழ்வில் திருகோயில் அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் சோனா கல்வி நிறுவனங்களின் தலைவருமான வள்ளியப்பா பேசும்பொழுது என்றும் இறைப்பணியில் இணைந்திருக்கும் எங்கள் சோனா கல்வி நிறுவனத்தால் பக்தர்களின் வசதிக்காகக் கட்டப்பட்டுள்ள இந்த வசந்த மண்டபம் மற்றும் வாகன பூஜை மண்டபத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அளிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில்  அரசு அதிகாரிகள், இந்து அறநிலைத்துறை   அதிகாரிகள், அறங்காவலர்கள், சோனா கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் தியாகு வள்ளியப்பா மற்றும் பக்கதர்கள், பொதுமக்கள் என பலர் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: