செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

தொழிலை விரிவு படுத்த வங்கியில் பெற்ற 55 லட்சம் ரூபாய் கடன் தொகைக்கு மாறாக 2 கோடி ரூபாய் பணம் பெற்ற கொண்டு மேலும் 75 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என மிரட்டும் சிட்டி யூனியன் வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுத்து நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள தொழிலதிபர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

தொழிலை விரிவு படுத்த வங்கியில் பெற்ற 55 லட்சம் ரூபாய் கடன் தொகைக்கு  மாறாக 2 கோடி ரூபாய் பணம் பெற்ற கொண்டு மேலும் 75 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என மிரட்டும் சிட்டி யூனியன் வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுத்து நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள தொழிலதிபர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு. 

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள மேற்கு ராஜா பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் ஸ்ரீ பவுனாம்பால் என்ற பெயரில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நூல் மில் ஆகியவற்றை நடத்தி வருகிறார். தொழிலை விரிவு படுத்துவதற்காக, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் கடந்த 2014 ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை சுமார் 55 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்காக தங்களுக்கு சொந்தமான நான்கு இடங்களில் உள்ள வீட்டு மனைகள் மற்றும்தங்கையின் பெயரில் உள்ள நிலம் ஆகியவற்றை உத்திரவாத பத்திரமாகவும் வழங்கி உள்ளார். வாங்கிய கடனுக்கு 2020 ஆம் ஆண்டு வரை 45 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளார் தொழிலதிபர் ஆனந்தன். இவ்வளவு தொகையையும் பெற்றுக் கொண்ட வங்கி மேலாளர் எனது மூன்று நிலங்களையும் ஜப்தி செய்து கொண்டு எனது இரண்டு நிலங்களை எனக்கு தெரியாமல் அதிக தொலைகைக்கு விற்பனை செய்து விட்டதாக குற்றம் சாட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்திருந்தார். அந்த மனுவில் தான் பெற்ற வங்கி கடனுக்கு 2 கோடி ரூபாய் அளவிற்கு பணம் பெற்றுக்கொண்டு மேலும் 75 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என வங்கி மேலாளர் தன்னை மிரட்டுவதாகவும், எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் எனது வங்கி கடன்  தொகையின் அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை கணக்கிட்டு அவரது வட்டிகளை ரத்து செய்து, எனது உத்திரவாத பத்திரமாக கொடுத்த அனைத்து நிலங்களையும் மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், வங்கி மேலாளர் மீது வழக்கு பதிவு செய்து தனக்கு நீதி விசாரணை வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். அப்போது பாதிக்கப்பட்டவரின்  குடும்பத்தாருடன் மணல் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி பழனிச்சாமியும் உடன் இருந்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: