சேலம்.
S.K. சுரேஷ் பபு
.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாவட்ட மகளிர் அணி செயலாளராக புவனேஸ்வரி நியமனம். கட்சியின் நிறுவன தலைவர் முத்தமிழன் வேல்முருகன் அறிவிப்பு.
சேலம் சின்ன திருப்பதி பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சார்ந்த புவனேஸ்வரி கட்சியின் கட்சியின் செயல்பாடுகளையும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் முறையாக செய்ததை கௌரவிக்கும் விதமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாவட்ட மகளிர் அணி செயலாளராக அந்த கட்சியின் நிறுவனத் தலைவர் முத்தமிழன் வேல்முருகன் அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் கோரிமேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சேலம் மாவட்ட மகளிர் அணி செயலாளர் புவனேஸ்வரி அவர்களுக்கு கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி கட்சிப் பணிகளுக்கு உதவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் முத்தமிழன் வேல்முருகன் கேட்டுக் கொண்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள புவனேஸ்வரிக்கு கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
0 coment rios: