சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் அருகே ஸ்ரீ தமிழ் அன்னை கல்வி அறக்கட்டளையின் சார்பில் 79 வது சுதந்திர தின விழா. விழாவையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு.
இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தின விழா சேலத்தை அடுத்துள்ள சின்ன சீரகாபாடியில் நடைபெற்றது. காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் ஸ்ரீ தமிழ் அன்னை கல்வி அறக்கட்டளையின் தலைவர் உதயகுமார் மூவர்ண கொடியினை ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை ஏற்றார். தொடர்ந்து சுதந்திர தின விழாவையொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர். இவர்களுக்கான பரிசளிப்பு விழா விழா அன்று மாலை நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. சின்ன சீரகாபாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவின் போது நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சுதந்திர தின கொடியேற்று விழா மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்வுகளின் போது ஸ்ரீ தமிழ் அன்னை கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள் கோபால் கோவிந்தராஜு ஸ்ரீனிவாசன் கண்ணன் பச்சைபாலி பழனிச்சாமி ஹைடெக் கணேசன் அருள்முருகன் ஏரிக்காடு குமார் பழனிச்சாமி அருள் பூபதி சண்முகம் மோகன் மோகனசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டதுடன் விழாவிற்கான ஏற்பாடுகளையும் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியாக அறக்கட்டளையின் நிர்வாகி ராஜேந்திரன் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வரவேற்று நன்றி உரையாற்றினார்.
0 coment rios: