சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
எழுச்சித் தமிழரின் 63 வது ஆண்டு பிறந்தநாள் விழா. முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி எளிமையாக கொண்டாடிய சேலம் தெற்கு தொகுதி விடுதலை சிறுத்தைகள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் 63 வது பிறந்தநாள் விழா எழுச்சி விழாவாக விடுதலை சிறுத்தைகளால் வழக்கமாகக் கொண்டாடப்படுவ து வழக்கம். இந்த நிலையில் திருமா அவர்களின் சின்ன தாயார் இறந்த துக்க நிகழ்வின் காரணமாக சேலம் தெற்கு மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. அதன்படி சேலம் பேர்லன்ஸ் பகுதியில் உள்ள அன்னை தெரசா ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சேலம் தெற்கு மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் மொழியரசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கட்சியில் மண்டல துணைச் செயலாளர் ஆறுமுகம், தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் கணபதி, சூரமங்கலம் பகுதி செயலாளர் பெரியசாமி, நிர்வாகிகள் அன்பு, செல்வம், அஜித் மற்றும் கௌதம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு முதியவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கி மகிழ்ந்தனர். முன்னதாக முதியோர் இல்ல நிர்வாகிகளால் தொல் திருமா அவர்களுக்கு பிறந்தநாள் பாடல் பாடப்பட்டது அப்பொழுது கட்சியினரும் ஒன்று சேர்ந்து பாடி கைகளை கட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இவர்களுடன் நட்புக்காக ஆதித்தமிழர் பேரவையின் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஆர் டி ஆர் சந்திரன் பங்கு பெற்றார்.
0 coment rios: