சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி முடிவு எடுக்க கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவருக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். சேலத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சேலம் நான்கு ரோடு பகுதியில் நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநில செயற்குழு கூட்டத்தில், கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான கட்சியின் மாநில செயலாளர்கள் ராம்ஜி, தர்மன், Dr.பொன் சேகர் சென்னை மாவட்ட தலைவர் மோகன் ராவ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் தேசிய கட்சியின் சார்பில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கட்சியின் மாநில தலைவர் சீனிவாசன் விரிவாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற இந்த மாநில செயற்குழு கூட்டத்தில், தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழக கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சியின் மாநில தலைவருக்கு தேசிய தலைமை முழு அதிகாரம் வழங்கிட வேண்டும், தேர்தல் நியாயமான முறையில் நடத்திட தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பொது பொதுத்துறை நிறுவனமான மத்திய அரசு பணியிடங்களில் தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும், நியாயமாக தேர்தல் நடைபெறாமல் அவர்களுக்கு பணம் கொடுக்கும் கட்சிகளின் தேர்தல் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தேசிய மக்கள் தேசிய கட்சியின் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

0 coment rios: