சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஆடி இறுதி கிருத்திகை நாளில் பக்தர்களுக்கு ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த சேலம் பள்ளப்பட்டி ஸ்ரீ ராஜரிஷி ஆசிரமம் பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.
தமிழ் கடவுள் ஆன முருகப் பெருமானுக்கு உகந்த தினமாக கிருத்திகை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆடி மாதத்தில் வரும் இறுதி கிருத்திகை நாளான இன்று சேலம் பள்ளப்பட்டியில் உள்ள பழனி ஸ்ரீ ராஜரிஷி ஆசிரம ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் எம்பெருமான் முருகப்பெருமானுக்கு இன்று காலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
குறிப்பாக பால் மஞ்சள் குங்குமம் இளநீர் திருமஞ்சனம் உள்ளிட்ட மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து எம்பெருமான் பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணிக்கு ராஜ அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு மகாதீப ஆராதனைகள் நடைபெற்றன.
இதில் பள்ளப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடி இறுதி கிருத்திகை நாளில் வழிபாடு மேற்கொண்டனர். இதனை அடுத்து ஆசிரமத்தின் சார்பில் திருக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு பூஜையில் ஆசிரம நிறுவனர் முருகனடியார் பாபு உட்பட நிர்வாகிகள் சுப்ரமணியம், கேசவமூர்த்தி, வசியா, வாசுகி மற்றும் கிருபா உள்ளிட்டோர் சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
0 coment rios: