தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக மாநிலத் தலைவர் எல்.கே.எம் சுரேஷ் வெளியிட்ட செய்தி குறிப்பில் ....
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, விசைத்தறி தொழில் மூலம், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் வாயிலாக, நேரடியாகவும், மறைமுகமாகவும், 20 லட்சத்துக்கு மேற்பட்ட நெசவாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்,
ஒரு நெசவாளருக்கு நான்கு முதல் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் என்று வைத்துக் கொண்டால் தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகைக்கு வாழ்வாதாரமும் வேலை வாய்ப்பும் பெற்று வருகின்றனர்,
இந்தியாவில் மொத்தம் 25 லட்சம் விசைத்தறிகள் மூலம் 70 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்,
இந்த விசைத்தறி தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது தற்போது விசைத்தறிகளை பழைய இரும்புக்கு உடைத்து விற்கக்கூடிய அவலமான சூழ்நிலையை கடந்து வருகிறது,
இந்நிலையில், இன்று 15.8.2025 சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, வரிகளை குறைப்பதற்கான செயல்பாடுகள் செய்வதாக தெரிவித்ததற்கு முதல் கண் எங்களது தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன்,
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியபோது, செயற்கை இழை நூலான ரயான் பாலிஸ்டர் சிந்தடிக் நூலுக்கு, 18 % ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு இருந்த நிலையில், விசைத்தறி சங்கங்கள் வாயிலாக அதனை குறைக்க கோரிக்கை வைத்த பொழுது, 12% குறைத்து கொடுக்கப்பட்டது.
இதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட செயற்கை இழை விஸ்கோஸ் சிந்தடிக் துணிகளை விற்பனை செய்யும்போது 5% விற்பனை வரி போட்டு விற்பனை செய்யும்போது, மீதமுள்ள 7%ம் உள்ளீட்டு வரி இருப்பாக (input credit balance) வரும் தொகையை நாங்கள் மீண்டும் பெறுவதற்கு நூல் கொள்முதல் செய்த நாளிலிருந்து மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மேல் ஆவதால், எங்கள் தொழில் முதலீடுகள் அனைத்தும் வரி இருப்பாக மாறிவிடுகிறது,
இதனால் விசைத்தறியாளர்கள் நூல் கொள்முதல் செய்வதற்கு அதிகப்படியான கடன் பெறுவதற்கான சூழல் ஏற்படுவதையும், அதற்காக வட்டி கட்டுவதால் தொழில் நஷ்டம் அடைவதை தவிர்ப்பதற்கு, செயற்கை இழை விஸ்கோஸ் மற்றும் சிந்தடிக் நூலுக்கு 12 சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
0 coment rios: