ஈரோடு அருள்மிகு .ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து 3வது ஆடி வெள்ளியையொட்டி ஆன்மிக பயணம் இன்று அழைத்துச் செல்லப்பட்டனர்
ஆடி மாதத்தை ஒட்டி ஈரோடு
மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், இலவச ஆன்மிக சுற்றுலா அறிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், இலவச ஆன்மிக சுற்றுலா அறிவிக்கப்பட்டது.
இதன்படி, ஈரோடு அருள்மிகு .ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து 3வது ஆடி வெள்ளியையொட்டி ஆன்மிக பயணம் இன்று அழைத்துச் செல்லப்பட்டனர்,
பக்தர்கள் பயணிக்கும் 4 சுற்றுலா வேன்களை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் மதன்குமார் தலைமையில், அறங்காவலர் குழு நிர்வாகிகள் மாதேஸ்வரன், ரவிச்சந்திரன், கதிர், சண்முகவடிவு, கீதா மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.
ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்களுக்கு பக்தர்களுக்கு குடிநீர், காலை சிற்றுண்டி அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பண்ணாரி மாரியம்மன், அந்தியூர் பத்ரகாளியம்மன், பவானி செல்லாண்டியம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர், மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மதன்குமார் கூறுகையில் ... ஆடி மாத வெள்ளிகிழமைகளில், இந்த ஒருநாள் ஆன்மிக சுற்றுலா நடக்கும், பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், 60 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்கள் வயது சான்றிதழ், மருத்துவ சான்றிதழ், ஆதார் கார்டு, ஆண்டு வருமானம் 2,00,000 ரூபாய்க்கு மிகாமல் இருப்பதற்கான வருமான சான்றுடன் கூடிய விண்ணப்பத்தை, ஈரோட்டில் காந்திஜி சாலையில் உள்ள அறநிலைய துறை இணை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. இன்று நான்கு வேன்களில், 72 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்,
இதேபோல், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத வெள்ளி கிழமைகளில் ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்படுவர்கள் என தெரிவித்தார்.

0 coment rios: