சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
79 - வது சுதந்திர தின விழாவில் சமூக சேவகருக்கு மேலும் ஒரு விருது வழங்கி கௌரவிப்பு.
சேலத்தைச் சேர்ந்த டாக்டர் நாகா. அரவிந்தன் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் நிறுவனராகவும், தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார். மேலும் இவரின் சிறந்த சமூக சேவையை பாராட்டி ஏற்கனவே பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஏராளமான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறந்த சமூக சேவைக்காக டாக்டர் நாக அரவிந்தன் அவர்களுக்கு சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் சிறந்த சமூக சேவைக்கான விருதை வழங்கி கௌரவித்தார். அப்போது துணை மேயர் திருமதி சாரதாதேவி மாணிக்கம், ஆணையாளர் இளங்கோவன் மற்றும் மண்டல குழு தலைவர்கள் உடன் இருந்தனர்.

0 coment rios: