சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா. தாதகாப்பட்டியில் குடியிருப்போர் நல சங்கத்தினர் கப்பலோட்டிய தமிழருக்கு மாலை அணிவித்து மரியாதை.
இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தின விழா வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சி தலைவர் டாக்டர் பிருந்தா தேவி மூவர்ண கொடியினை ஏற்றி வைத்து, சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாநகராட்சி வளாகத்தில் சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் அவர்களும் மூவர்ண கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் மரியாதை ஏற்று நல உதவிகளை வழங்கினர். இதே போல நீதிமன்றம், ரயில்வே கோட்டம், சேலம் மத்திய சிறைச்சாலை உட்பட சேலம் மாநகரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் சுதந்திர தின விழா கோடாகாலமாக கொண்டாடப்பட்டது.இதன் ஒரு பகுதியாக சேலம் தாதகாப்பட்டி சீரகம் தெரு குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக 79வது இந்திய தேசிய சுதந்திர தின விழாவை
தாதகாப்பட்டியில் உள்ள கப்பலோட்டிய தமிழர்
வ உ சிதம்பரனார் சிலைக்கு
மாலை அணிவித்து
கொடி மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்வில் O.Tex இளங்கோவன், கோல்ட்தேவா, நல சங்க நிர்வாகிகள் சேகோ.ரவிக்குமார், சுந்தரராஜன், ஆறுமுகம் மற்றும்
பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.

0 coment rios: