சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் பார்பி குயின் உணவகத்தில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.
இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி அவர்களும் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாநகராட்சி வளாகத்தில் சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் அவர்களும் அவர்களும் மூவர்ண கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். இதேபோல இன்று சேலத்தில் பிரபல உணவகமான பார்பிகுயின் நிறுவனத்தின் சார்பில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சேலம் மாநகரை சுற்றியுள்ள அனைத்து உணவக கிளை ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த விழாவானது சேலம் குகைப் பகுதியில் உள்ள பார்பிகுயின் உணவக வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் பார்பிகுயின் நிர்வாகி உமர் முக்தர் மூவர்ண கொடியினை ஏற்றி வைத்து தேசிய கடிக்கு மரியாதை செய்தார். தொடர்ந்து உணவக ஊழியர்கள் இடையே சுதந்திர தின உரையையும் ஆற்றினார். பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் பீர்மைதீன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

0 coment rios: