திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடத்தியதாக கூறி பாஜக அரசை கண்டித்தும் உடனடியாக பாஜக அரசு பதவி விலக வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அகில இந்திய செயலாளர் கோபிநாத் பழனியப்பன் தலைமையில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலமானது நடைபெற்றது. பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த ஊர்வலமானது மங்களம் சாலை வழியாக பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே முடிவடைந்தது இதனை அடுத்து அங்கு பேசிய கோபிநாத் பழனியப்பன் கூறுகையில் பாஜக மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ததாகவும் மேலும் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றதாகவும் எனவே உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இதனை விசாரித்து பாஜக அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அவர் கூறினார் மேலும் பாஜக அரசிற்கு அவர் கன்டணங்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பல்லடம் நகரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வடக்கு வட்டாரத் தலைவர் கணேசன், மாநிலச் செயலாளர் முத்துராமலிங்கம், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் மணிராஜ்,
சட்டமன்ற பொறுப்பாளர் சத்யமூர்த்தி,
நகர நிர்வாகிகள் ராமச்சந்திரன்,கனகராஜ்,ராஜ்குமார்
செந்தில்,ருத்ர மூர்த்தி,சுரேஷ்
உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 coment rios: