சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
உலக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த கூலி திரைப்படம். உற்சாக மற்றும் வரவேற்பு கொண்டாட்டத்தில் உலக ரசிகர்களையே திரும்பி பார்க்கச் செய்த சேலம் ரசிகர்கள்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பிலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பிலும் தயாரான கூலி திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. ஆவலுடன் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட கூலி திரைப்படம் இன்று சேலம் லைன் மேடு பகுதியில் உள்ள கே..எஸ் திரையரங்கில் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர்களான குரால்நத்தம் சந்திரசேகரன் மற்றும் குளோபல் வெங்கட் ஆகியோரது ஏற்பாட்டில் திரைப்படத்தை வரவேற்க பிரம்மாண்ட கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கே.எஸ்.திரையரங்கம் அருகே திரண்ட ஏராளமான ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் டிஜிட்டல் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகிற்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக கேக் வெட்டியும், வாயு காற்றுடன் கூடிய காகித துண்டுகளை பறக்க விட்டும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாகத்தில் திழைத்தனர்.
இதுகுறித்து குரால்நத்தம் சந்திரசேகரன், செய்தியாளர்களிடம் கூறும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் என்றாலே சேலம் உட்பட உலக ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டத்தை போன்றது என்றும் 75 வயதிலும் ஒரு இளைஞரை போன்று சுறுசுறுப்பாக ஒவ்வொரு காட்சிகளிலும் அவர் இடம் பெற்றது தங்களை உற்சாகத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றதாகவும், திரைக்கதை, இசை மற்றும் அவரது நடிப்பு இந்த படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளதாகவும், சூப்பர் ஸ்டார் திரையுலகத்திற்கு வந்து 50 ஆண்டுகள் சாதனையை இனி எவராலும் நிறைவேற்ற முடியாது என்று குறிப்பிட்ட அவர், எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும் அவருக்கென ஒரு தனி பஞ்சு டயலாக் இருக்கும் ஆனால் இந்த படத்தில் அவர் தோன்றும் ஒவ்வொரு சீனும் பஞ்சாக இருந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதேபோன்று சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான குளோபல் வெங்கட் நம்மிடையே கூறுகையில், 75 வயதிலும் துடிப்பு மக்க இளைஞராகம நடித்துள்ள ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வெள்ளிவிழா காண தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் 50 அல்ல 100 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் கூட இந்தியாவிற்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே என்றும் தெரிவித்தார். இந்த திரைப்படத்தின் அவர் தோன்றும் முதல் காட்சியிலிருந்து படம் நிறைவு பெறும் வரை அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளும் மிரட்டலாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

0 coment rios: