வியாழன், 14 ஆகஸ்ட், 2025

உலக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த கூலி திரைப்படம். உற்சாக மற்றும் வரவேற்பு கொண்டாட்டத்தில் உலக ரசிகர்களையே திரும்பி பார்க்கச் செய்த சேலம் ரசிகர்கள்.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

உலக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த கூலி திரைப்படம். உற்சாக மற்றும் வரவேற்பு கொண்டாட்டத்தில் உலக ரசிகர்களையே திரும்பி பார்க்கச் செய்த சேலம் ரசிகர்கள். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பிலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பிலும் தயாரான கூலி திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. ஆவலுடன் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட கூலி திரைப்படம் இன்று சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர்களான பாரப்பட்டி கனகராஜ், சுக்கம்பட்டி பிரபு மற்றும் புருஷோத்தமன் ஆகியோரது ஏற்பாட்டில் திரைப்படத்தை வரவேற்க பிரம்மாண்ட கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
அதன்படி மல்டிபிளக்ஸ் திரையரங்கம் அருகே இருந்து மேளதாளத்துடன் திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் திரையரங்கம் முன்பாக பட்டாசுகளை வெடித்தும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் டிஜிட்டல் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகிற்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக கேக் வெட்டியும், வாயு காற்றுடன் கூடிய காகித துண்டுகளை பறக்க விட்டும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாகத்தில்  திழைத்தனர். இதுகுறித்து பாரப்பட்டி கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் என்றாலே சேலம் உட்பட உலக ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டத்தை போன்றது என்றும் சூப்பர் ஸ்டார் திரையுலகத்திற்கு வந்து 50 ஆண்டுகள் மட்டும் அல்ல 100 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் கூட இந்தியாவிற்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே என்றும் தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: