சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் கிச்சிப்பாளையத்தில் சதுர்த்தி நாளில் ஸ்ரீ வழிகாட்டும் கணபதியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கஜமுகனின் ஜனன தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவில் உட்பட பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் முழு முதல் கடவுளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் எது விமர்சையாக நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதன் ஒரு பகுதியாக சேலம் கிச்சிப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அங்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் வீட்டு அலங்கார பந்தலில் ஸ்ரீ வழிகாட்டும் கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டு முந்தி முதல்வனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டும் பல்வேறு மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரமும் மேற்கொள்ளப்பட்டன. ஸ்ரீ அங்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் நிர்வாக தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தொடர்ந்து கண நாதனுக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவை ஒட்டி விழா பந்தலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கருப்பா கருப்பா அழகா என்று கோஷமிட்டு வழிபட்டது விண்ணை பிளக்கும் வகையில் அமைந்திருந்தது. தொடர்ந்து திருக்கோவிலின் சார்பில் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

0 coment rios: