சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
விநாயகர் சதுர்த்தியை ஓட்டி சேலம் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் திடலில் ஐந்தாயிரம் பேருக்கு சமபந்தி விருந்து. சேலம் செவ்வாய்பேட்டையில் பக்தர்களுக்கு அருள் பாலித்த குபேர விநாயகர்.
சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் செவ்வாய்பேட்டை ஆர்ஆர் நண்பர்கள் குழுவின் சார்பாக முதலாம் ஆண்டு படைப்பாக விநாயகர் சதுர்த்தி விழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சேலம் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் திடலில் பிரம்மாண்டமாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு காலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நண்பர்கள் குழுவின் தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நிர்வாகிகள் சேகர் ஆனந்த் உள்ளிட்டோர்
முன்னிலை வகித்தனர். இந்த அன்னதான நிகழ்வில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது மக்களுக்கான சமபந்தி விருதினை தொடங்கி வைத்தார். அறுசுவையுடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்ட சதுர்த்தி விழா மாலை நிறைவு பெற்றது. இந்த நிகழ்வில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநகர அமைப்பாளர் பி எஸ் மணிகண்டன், 28வது கோட்ட திமுக செயலாளர் சங்கர், நடேசன், மணி, சரவண சங்கரநாராயணன் மற்றும் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல, சேலம் செவ்வாய்பேட்டை அரசமர அப்புசிட்டி தெருவில் ஸ்ரீ அரசமர விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியின் சார்பாக 32 வது ஆண்டு படைப்பாக சதுர்த்தி விழாவையொட்டி குபேரபுரியில் குபேரன் மற்றும் லட்சுமியுடன் அருள் பாலித்த ஸ்ரீ குபேர கணபதி. இன்று தொடங்கிய இந்த விழா வரும் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் நாள்தோறும் சிறப்பு பூஜைகளுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் வரும் 29ஆம் தேதி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிறப்பு அன்னதானம் வழங்க உள்ளதாகவும் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் சுவாமி திருவிதி விழாவும் நடைபெற உள்ளதாக விழா கமிட்டியினர் தெரிவித்தனர். ஸ்ரீ அரசு மர விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி தலைவர் பாலாஜி தலைமையில் நடைபெறும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செயலாளர் ரவிக்குமார் பொருளாளர் சத்திய நாராயணன் மற்றும் துணை பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்டவர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
0 coment rios: