மத்திய மாவட்ட திமுகவில் மாற்றுக் கட்சியினர் பெருமளவில் இணைந்து வருவதால் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம்..!
ஈரோடு மத்திய மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சியை சேர்ந்த பல்வேறு மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.
முன்னாள் அமைச்சரும், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான தோப்பு என்.டி. வெங்கடாசலம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாஜக ஒன்றிய தலைவர் அருணா சிவப்பிரகாஷ் தலைமையில், அகில இந்திய நாடார் மக்கள் பேரவை மாநில அமைப்பு செயலாளர் மகாராஜா, சமத்துவ மக்கள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் சபீர், பாஜக நகர துணைத் தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் தங்களது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைந்தனர்,
மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களை திமுக துண்டு அணிவித்து வரவேற்றார்,
இவ்விழாவில் பெருந்துறை பேரூராட்சி தலைவர் ஓ.சி.வி. ராஜேந்திரன், கருமாண்டி செல்லிபாளையம் பேரூர் செயலாளர் மூர்த்தி, முன்னாள் இயக்குநர் நாகராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்று புதிதாக இணைந்தவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
பெருந்துறை மற்றும் பவானி பகுதிகளில் திமுக வலுசேர்க்கும் விதமாக நடைபெறும் இவ்வகை தொடர்ச்சியான இணைவுகள், கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 coment rios: