வியாழன், 28 ஆகஸ்ட், 2025

கந்தனுக்கு உகந்த வளர்பிறை கந்த சஷ்டி தினத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த சேலம் பள்ளப்பட்டி ஸ்ரீ ராஜரிஷி ஆசிரமம் பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

கந்தனுக்கு உகந்த வளர்பிறை கந்த சஷ்டி தினத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த சேலம் பள்ளப்பட்டி ஸ்ரீ ராஜரிஷி ஆசிரமம் பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி.

தமிழ் கடவுள் ஆன முருகப் பெருமானுக்கு  உகந்த தினமாக கந்த சஷ்டி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில்  வளர்பிறை கந்த சஷ்டி தினமான இன்று சேலம் பள்ளப்பட்டியில் உள்ள பழனி ஸ்ரீ ராஜரிஷி ஆசிரம  ஸ்ரீ பால  தண்டாயுதபாணி திருக்கோவிலில்  எம்பெருமான் முருகப்பெருமானுக்கு இன்று காலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
குறிப்பாக பால் மஞ்சள் குங்குமம் இளநீர் திருமஞ்சனம் உள்ளிட்ட மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து எம்பெருமான் பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணிக்கு ராஜ அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு மகாதீப ஆராதனைகள் நடைபெற்றன. இந்த சிறப்பு பூஜையில் பள்ளப்பட்டி,  சினிமா நகர், அரிசிபாளையம்,  சாமிநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு எம்பெருமான் முருகப்பெருமானை வழிபட்டு சென்றனர். வளர்பிறை கந்த சஷ்டி பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் ஆசிரம நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
சேலம் பள்ளப்பட்டி ராஜரிஷி ஆசிரமம் தலைவர் ராஜரிஷி பாபு, நிர்வாகிகள் சுதன் வாசுகி வசியா சரவணன் மற்றும் விக்ரம் உள்ளிட்டோர் வளர்பிறை சஷ்டி சிறப்பு பூஜைக்கான  ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: