சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்திற்கு வந்த வாக்கு பதிவு சரி பார்ப்பு கூட்டம். சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய மற்றும் மாநில கட்சி நிர்வாகிகளுடன் தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி பங்கேற்பு.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக சேலம் மாவட்டத்தில் பயன்படுத்தப்படக் கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெங்களூரூவிலிருந்து வரப்பெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தா தேவி தலைமையில், தேசிய மற்றும் மாநில கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்த்து கூட்டம் நடைபெற்றது.
தேசிய மற்றும் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியாளர் தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் அனைவரின் முன்னரே பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டன.
தேசிய மற்றும் மாநில கட்சி நிர்வாகிகளுடன், தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ்மற்றும் விவசாய அணையின் மாவட்ட தலைவர் ராமன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

0 coment rios: