ஈரோடு பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில், பாஜக மாவட்ட தலைவர் எஸ்.எம் செந்தில் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது,
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கே சரஸ்வதி, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி எம்.பி, முன்னாள் மாவட்ட தலைவர் வேதாந்தம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, மாவட்டத் தலைவர் எஸ்.எம் செந்தில் செய்தியாளர்களை சந்தித்தார்....
வெள்ளகோவில் முதல் சங்ககிரி வரை புதிதாக போடப்படுகிறது நான்கு வழி சாலைக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுவதாக திருப்பூர் மாவட்டத்திலிருந்து அறிக்கை வெளியாகி இருந்தது,
அதேபோல் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இந்த நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் எடுப்பதாக பொதுமக்கள், விவசாயிகள் எங்களிடம் கோரிக்கை விடுத்தனர்,
மக்களின் கோரிக்கையைடுத்து டெல்லி சென்று மத்திய தரை மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, மக்களின் கோரிக்கைகளை கொடுத்துள்ளோம், அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் அவர்கள், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நான்கு வழி சாலை பணியை மேற்கொள்ள மாட்டோம் என உறுதியளித்துள்ளார்,
மேலும், சாலையை சீரமைப்பதற்கான 2000 கோடி ரூபாய் செலவில், பாரத பிரதமர் பாரத் மகா திட்டத்தின் கீழ் இப்பணிகளை மேற்கொள்வதாக கூறியிருந்தார்கள், பொதுமக்களின் தேவைக்கும், நாட்டு மக்களின் நன்மைக்கும் இந்த சாலை தேவை தேவைப்படுகிறது என்பதையும் மத்திய அமைச்சர் கூறினார்,
இந்த சாலை பணிகளில், மொடக்குறிச்சி தொகுதியை பொருத்தவரை வணிக நிறுவனங்கள் வீடுகள் என அதிகளவில் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி கே சரஸ்வதி அவர்கள் கேட்டு கேட்டுக்கொண்டதின் அடிப்படையில், மக்களின் நலனுக்காக நாங்கள் டெல்லி சென்று கோரிக்கை விடுத்திருக்கிறோம், இதற்கு மத்திய அமைச்சர் இசைவு தெரிவித்துள்ளார்,
மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இன்னும் பத்து நாட்களுக்குள் ஈரோடு வந்து இந்த சாலை பணிகள் குறித்து ஆய்வு செய்து அதற்கான அறிக்கையும் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்,
வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசிய ஒற்றுமையையும் தேசப்பற்றையும் வலியுறுத்தும் விதமாக அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி வைத்து, அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து தேசிய விழிப்புணர்வு பேரணையையும் நடத்த இருக்கிறோம்,
அதேபோல் பவானி ஆற்றில் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலத்தின் மணல் தீட்டுக்களை அகற்ற வலியுறுத்தியிருந்தோம் தமிழக பொதுப்பணித்துறை இந்த விஷயத்தில் மிகவும் மெத்தனமாக செயல்படுகிறது எனவும் குற்றம் சாட்டினார்.

0 coment rios: