சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் தெரு தேரோட்டத்திற்கு வந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இனிப்பு மற்றும் குடிநீர் வழங்கி மகிழ்ந்த தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகள். பக்தர்கள் நெகிழ்ச்சி.
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி பெருவிழா முகூர்த்த கால் நடுதலுடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இதனை அடுத்து முக்கிய நிகழ்வுகளாக அம்மனுக்கு பூச்சாடுதல், கம்பம் நடுதல், சக்தி அழைத்தல், பொங்கல் மற்றும் உருளுதண்டம் உள்ளிட்ட வைபவங்களுடன் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வாக 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த, பல்வேறு வரலாறுகளுக்கு சொந்தமான சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசால் புதிதாக பிரம்மாண்டமான தேர் வடிவமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. ஆடி பெருவிழாவில் முக்கிய நிகழ்வாக முதன் முறையாக நடப்பாண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆடி பெருவிழாவில் புதிய திருத்தேரில் அம்மனின் உற்சவர் படியமர்த்தப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திருவீதி விழா தொடங்கியது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனர். இதனிடையே தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் அறிவுறுத்தலின் பேரில், 32வது கோட்ட தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் சகோதரர்கள் தங்களுக்கு சொந்த செலவில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தங்களது சொந்த செலவில் இனிப்புகள் மற்றும் குடிநீர் பாட்டில்களை விநியோகித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். த.வெ.க 32 வது கோட்ட செயலாளர் சைபுல்லா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 32 வது கோட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரிஹானா பேகம், துணைச் செயலாளர் ரேஷ்மா, பகுதி செயலாளர் ரிஜ்வான், இணை செயலாளர் முகமது அர்ஷத் மற்றும் பொருளாளர் மோகன் ஒலியிட்டோர் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தங்களது சொந்த செலவில் குடிநீர் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தியது மனிதநேயம் மிக்கதாக அங்கு வந்த இந்து பக்தர்கள் அனைவராலும் தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்த இஸ்லாமிய சகோதரர் மற்றும் சகோதரிகளை போற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 coment rios: