சேலம்.
S.K.சுரேஷ்பாபு.
சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெரு விழாவை ஒட்டி முதன்முறையாக திருத்தேர் பவனி.....சக்தி கோஷங்கள் விண்ணை பிளக்க திருத்தேரினை வடம் பிடித்து இழுத்த ஏராளமான பக்தர்கள்..
தமிழ் மாதங்களில் வரும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.இதனையொட்டி தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலையங்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடைபெறும் ஆடிபெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மாதத்தில் ஆடி-1, ஆடி-18, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி என அடுத்தடுத்து விஷேசங்கள் வரும். இதுபோன்ற நாட்களில் கோவில்களில் விஷேச பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ஆடி மாதம் தொடங்கியது முதல் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சேலத்தில் உள்ள 8 பட்டிகளுக்கும் காவல் தெய்வமாக விளங்கி வரும், சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில், நாள்தோறும் காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி பெருவிழா முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கிய ஆடி திருவிழாவில், முக்கிய நிகழ்வுகளாக அம்மனுக்கு பூச்சாட்டுகள், கம்பம் நடுதல், சக்தி அழைத்தல், பொங்கல் மற்றும் உருளுதண்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது அடுத்து இன்று வரலாற்று சிறப்புமிக்க கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது. தமிழக அரசால் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப் பிரம்மாண்டமான முறையில் வடிவமைக்கப்பட்ட திருத்தேரினை சிறப்பாக அலங்கரித்து அதில் சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் உற்சவர் படியமர்த்தப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி கோஷங்கள் விண்ணை பிளக்க திருத்தேரணி வடம் பிடித்து இழுத்தனர். சேலம் மாநகரின் முக்கிய வீதிகள் ஆன முதல் அக்ரஹாரம், ராஜகணபதி திருக்கோவில், கமலா ஜங்ஷன், 2 வது அக்ரஹாரம், பட்டை கோயில், சின்ன கடை வீதி மற்றும் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் வழியாக மீண்டும் திருத்தேரானது கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் அடைந்தது. வழி நெடுங்கிலும் ஆடி அசைந்து வந்த திருத்தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்ததோடு வழிபாடுகள் மேற்கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திருக்கோவில் அறங்காவலர் குழு நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

0 coment rios: