சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சேலம் ஆவின் பால் பண்ணையை முற்றுகையிட்டு போராட்டம். தவறும் பட்சத்தில் அக்டோபர் 22 ஆம் தேதி தமிழக முழுவதும் பால் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படும் என்றும் விவசாயிகள் அரசுக்கு எச்சரிக்கை.
தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை தமிழ்நாடு அரசு தற்போதைய வழியில் இருந்து பால் லிட்டர் ஒன்றிற்கு கூடுதலாக 15 ரூபாயும் இதே போல எருமை பால் இருக்கும் தற்போது உள்ள விலையை காட்டிலும் கூடுதலாக 15 ரூபாயை உயர்த்தியும் வழங்க கோரி சேலம் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றிய முன்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கரவை மாடுகளுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் ராஜ பெருமாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் சிவபெருமாள் மற்றும் மாநில செயலாளர் ராஜேந்திரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது கறவை மாடுகளுடன் தங்களது பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். விவசாயிகளின் போராட்டம் குறித்து அந்த சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி செய்தியாளர்களிடம் கூறும் போது, ஏராளமான அறிவிப்புகளை விவசாயிகளுக்கு அறிவித்துவிட்டு ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக மாநில அரசு தற்பொழுது வரை அறிவித்த திட்டங்கள் எதுவும் தமிழக விவசாயிகளுக்கு என இல்லை என்று குற்றம் சாட்டியதுடன், தங்களின் அத்தியாவசிய கோரிக்கையான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காத பட்சத்தில் அக்டோபர் 22ஆம் தேதி தமிழக முழுவதும் பால் உற்பத்தி நிறுத்த போராட்டம் மேற்கொள்வதோடு ஒவ்வொரு தனியார் பால் பண்ணையையும் முடக்கமும் தயங்க மாட்டோம் என்றும் இந்த சூழலில் தமிழகத்தில் பால் பற்றாக்குறையை போக்குவதற்காக மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரும் பாலை தமிழக எல்லையிலேயே ஆங்காங்கே தடுத்து நிறுத்தி தங்களை எதிர்ப்பை வெளிப்படுத்த தயங்க மாட்டோம் என்று தமிழக அரசுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.

0 coment rios: