திங்கள், 22 செப்டம்பர், 2025

தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல்படும் அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சார்ந்த செந்தில்குமார் ஆதரவாளர்களுடன் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல்படும் அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சார்ந்த செந்தில்குமார் ஆதரவாளர்களுடன் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு. 

சேலம் அம்மாபேட்டை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களை ஒழிகிய பிரச்சனை பண மோசடி பிரச்சனை. சேலத்தில் மட்டும் பல நூறு கோடிகள் மோசடி புகார் தொடர்பாக அன்னை தெரசா அறக்கட்டளையின் நிறுவனர் விஜயபானு என்பவர் சமீபத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த பண மோசடி விவகாரத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, வேண்டும் என்று தங்களது அமைப்பின் பெயரை கெடுப்பதற்காகவும் சொத்தை அபகரிப்பதற்காகவும் செந்தில் குமார் என்ற பாதிரியார் முயற்சி மேற்கொண்டு வருகிறார் என ஏற்கனவே விஜய பானு தரப்பில் அவரது வழக்கறிஞர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பல கோடி ரூபாய் மோசடி சம்பந்தமுடியை செந்தில்குமார் இன்று சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிப்பதற்காக வந்திருந்தார் அவர்களது ஆதரவாளர்களுடன். அந்த மனதில் செந்தில்குமார் எனும் நான் சேலம் அம்மாபேட்டை தமிழ்நாடு கிராம வங்கி எதிரில் கடந்த 24 ஆண்டுகளாக கிறிஸ்துவ தேவாலய ஜெப ஐக்கியம் நடத்தி வருவதாகவும், ஏழை மக்களுக்கு சேவை செய்து வருகிறேன் இந்த நிலையில் கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி அன்று அன்னை தெரசா அறக்கட்டளை மோசடி சம்பந்தமாக என் மீது நீதிமன்ற நடவடிக்கையில் என் மீதும் என் மனைவி கரோலின் ஜான்சி மீதும் மேலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி 66 நாட்கள் நானும் என் மனைவியும் கோவையில் மத்திய சிறையில் இருந்ததாகவும் தற்போது பிணை கிடைக்கப்பெற்று வெளியில் வந்துள்ளதாகவும் தாங்கள் குற்றம் அற்றவர்கள் என நிரூபிப்பதற்கு வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்ற செயல் நடவடிக்கையில் உள்ளோம் இந்த சமயத்தில் இந்திய குடியரசு கட்சி ஆர்வி தமிழ்நாடு மாநில தலைவர் வெங்கடேஷ் என்கின்ற வீராணம் அம்பேத்கர் நகர் ஸ்டேடஸ் கார்டன் பகுதியை சார்ந்த இவர் கடந்த 15 ஆம் தேதி அன்று எனது அலுவலகத்திற்கு வந்து ஒரு துண்டு பிரசுதத்தை காட்டி வருகின்ற 29ஆம் தேதி நான் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் தங்கள் மீதும் தங்களது குடும்பத்தார் மீதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் மேற்படி உங்கள் கருத்துக்களை கூறுங்கள் எனக் கூறியதோடு மட்டுமல்லாமல் எனக்கு தேவையான பணத்தை கொடுத்தால் இந்த ஆர்ப்பாட்டம் நான் நடத்த மாட்டேன் என்று என்னிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வருவதாகவும் மேலும் நான் என் மீதும் என் மனைவி மீதும் நீதிமன்ற வழக்கு நடந்து கொண்டு இருப்பதால் மேற்படியான வெங்கடேஷ் என்பவர் மீதும் என் குடும்பத்தின் மீதும் நான் முறையாக சம்பாதித்த சொத்து மீதும் தேவையற்ற கலங்கத்தை பணத்திற்காக சுமத்துகிறார் என்று குறிப்பிட்டுள்ள அவர் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இது மட்டுமல்லாமல் வரும் 29 ஆம் தேதி வெங்கடேஷ் என்பவர் என்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்திற்காக அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க மறுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்வதாகவும் இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: