சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக சேலத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் 16 அம்ச கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. பதினாறு அம்ச தீர்மானங்களை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் சேலம் மாவட்ட கூட்டமைப்பின் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ், சுப்பிரமணி செல்ல பாண்டியன் ரவி பழனிச்சாமி மற்றும் ராதா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்க வேண்டும், 1 6 2009 முதல் அரசாணை எண் 234 இன் படி மக்கள் நல பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை தற்போது காலமுறை ஊதியமாக நினைத்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் மேல்நிலை நீர் தைக்க தொட்டி இயக்குபவர்களின் பனிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலம் வரை ஊதியம் 15000 ரூபாய் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பதினாறும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
போராட்டம் குறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவசங்கர் கூறுகையில் முதற்கட்ட போராட்டத்தை தொடர்ந்து தங்களது கோரிக்கை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் இரண்டாம் கட்ட போராட்டமாக வரும் அக்டோபர் 29ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அதனை தொடர்ந்து நவம்பர் 24ஆம் தேதி தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கங்களின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தூய்மை பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 coment rios: