சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் தேசிய அளவிலான பரதநாட்டியத்துடன் கூடிய தற்காப்பு கலை போட்டிகள். 38 மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற 1500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்.
கிங் மேக்கர் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் தேசிய அளவிலான கராத்தே குங்ஃபூ சிலம்பம் மற்றும் பரதம் 2025 காண போட்டி சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அகாடமியின் நிறுவனர் சிவா சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற போட்டியில் மாநில தலைவர் முஹம்மது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 38 மாவட்டங்களில் இருந்து 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற இந்த போட்டியினை சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
வயது வாரியாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த கராத்தே குங்ஃபூ சிலம்பம் மற்றும் பரத போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகள் தங்களது முழு திறமைகளை வெளிப்படுத்தி போட்டியில் பங்கேற்றனர்.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் போதை பழக்கத்தை தடுக்க விழிப்புணர்வு தற்காப்பு கலை போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு ஏற்கனவே விளையாட்டு துறைக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகள் சலுகைகள் அறிவித்து வந்தாலுமே கூட தற்போதுள்ள இட ஒதுக்கீடு சதவீதம் குறைவாக உள்ளதாகவும் இது போன்ற போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கி எதிர்காலத்தில் அவர்கள் நல்ல பணியில் அமர இந்த கூடுதலான சதவிகித இட ஒதுக்கீடு பயனுள்ளதாக இருக்கும் என்றும் எனவே தமிழக அரசு விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு கூடுதலாக அரசுத்துறை அலுவலகங்களில் பணியாற்று கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று அந்த அகாடமியின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் ஆகியோர் கூட்டாக கேட்டுக் கொண்டனர்.

0 coment rios: