சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய குடியரசு கட்சி ( அத்வாலே ) தமிழ்நாடு கட்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு.
இந்திய குடியரசு கட்சி ( அத்வாலே ) தமிழ்நாடு கட்சிக்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். சமீபத்தில் இந்த கட்சிக்கான சேலம் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் கட்சியின் தமிழ்நாடு செயல் தலைவராக அம்பேத்கர் தேர்வு செய்யப்பட்டார் இதேபோல, சேலம் மாவட்ட தலைவராக பெரியசாமி மாவட்ட பொதுச் செயலாளர் பழனி மாவட்ட துணை தலைவராக பெரியசாமி மற்றும் மாவட்ட செயலாளராக முகமது ரஃபீக் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பாராட்டு விழா சேலம் நாராயண நகர் பகுதியில் உள்ள குருவி நகரில் கட்சிய அலுவலகத்தில் நடைபெற்றது. செயல் தலைவர் அம்பேத்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தொடர்ந்து கட்சியின் செயல்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து சேலம் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சார்பாக அதன் செயல் தலைவர் அம்பேத்கர் தேசிய தலைவர் ராமதாஸ் அத்வாலைக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

0 coment rios: