சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
6500 ஓட்டப்பந்தய வீரர்களால் களைகட்டிய சேலம் காவேரி மாரத்தான்.
இதயத்துக்காக ஓடுவோம் இதய ஆரோக்கியத்திற்காக ஓடுவோம் என்ற முழக்கத்துடன், சேலம் காவேரி மருத்துவமனை நடத்திய ஐந்தாம் ஆண்டு மாரத்தான் வெற்றிகரமாக நடைபெற்றது. இளைஞர்கள் முதல் குடும்பத்தினர் வரை, 6500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சேலத்தையே அதிரச் செய்தனர். ஓடுவதென்பது ஒரு சிறந்த உடற்பயிற்சி. அதுமட்டுமல்ல, அது இதயத்தின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் ஒரு வழி என்பதை இந்த நகரமே சேர்ந்து உரக்கச் சொன்னது.
சேலம் மகாத்மா காந்தி மைதானத்தில், அதிகாலை பனி பொழியத் தொடங்கிய போதே, ஓட்டப்பந்தய வீரர்களின் உற்சாகம் களைகட்டத் தொடங்கிவிட்டது. அதிகாலை 04:30 மணிக்கு சரவணன் உதவி ஆணையர் போக்குவரத்து சேலம் மாநகர காவல் துறை கொடியசைத்து, 21.1 கி.மீ அரை மாரத்தானைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, காலை 05:30 மணிக்கு, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல், ஐ.பி.எஸ். அவர்கள் 10 கி.மீ ஓட்டத்தையும், காலை 07:00 மணிக்கு, சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில் குமார் கிரி, ஐ.பி.எஸ். அவர்கள் 5.5 கி.மீ ஓட்டத்தையும் தொடங்கி வைத்தனர். இந்த மாபெரும் நிகழ்வில் பங்கேற்றவர்களின் உடற்பயிற்சி மீதான ஆர்வத்தைக் கண்டு, சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட நீதிபதியுமான திருமதி டாக்டர் பிருந்தா தேவி அவர்கள் தனது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இதுகுறித்து காவேரி மருத்துவமனை கூறியதாவாது இது வெறும் ஓட்டப்பந்தயம் அல்ல இது ஆரோக்கியமான வாழ்க்கைக்கான ஒரு திருவிழா! இந்த மாபெரும் பங்கேற்பு, எங்கள் இதயங்களை நிரப்பிவிட்டது! ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் எங்கள் பயணம் தொடரும் இந்த மாரத்தானில் பங்கேற்ற அனைவரும், வெற்றி பெற்றவர்கள் மட்டுமின்றி, ஆரோக்கியத்தின் தூதுவர்களாகக் கொண்டாடப்பட்டனர். சேலத்தின் சாலைகளில் ஒலித்த ஓட்டம் என்ற சத்தம், இதயத்தின் ஆரோக்கியத்தைக் காக்க, மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துவிட்டனர் என்பதை உலகிற்குச் சொல்லியது
ஆரோக்கியமாக வாழ ஓடுவோம் உற்சாகமாகச் சேருவோம் என்று தெரிவித்துள்ளது.

0 coment rios: