சனி, 20 செப்டம்பர், 2025

சேலத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான கமலம் கார்னிவல் 2025 கலை விழா. போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகள் உட்பட பெரியவர்கள் வரை அசத்தல்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான கமலம் கார்னிவல் 2025 கலை விழா. போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகள் உட்பட பெரியவர்கள் வரை அசத்தல். 

சேலம் ரெட்டியூர்  
எம்மி கார்டன் மறுவாழ்வு அறக்கட்டளை மற்றும் டெய்லி ஃப்ரெஷ் ஃப்ரூட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய அமைப்புகளின் சார்பில் மூன்றாவது ஆண்டாக மன வளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான கமலம் காரியங்கள் 2025 கலை விழா கடந்த 17ஆம் தேதி சேலம் சிவாயநகர் பகுதியில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. எம்மி கார்டன் மறுவாழ்வு அறக்கட்டளையின் தலைவர் ஹேமா பிரைட் தலைமையில் நடைபெற்ற இந்த கலை விழாவில் ஒருங்கிணைப்பாளர் இவாஞ்சலின் டோமினிக் முன்னிலை வகித்தார்.
சேலத்தில் உள்ள NGO'S பள்ளிகளில் உள்ள மனவளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகள் உட்பட சிறப்பு ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் உதவியாளர்கள் என 280க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் ஒன்று முதல் ஆறு, ஏழு முதல் 14, 15 முதல் 18 மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் உட்பட பொதுமக்கள் சிறப்பு ஆசிரியர்கள் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு என நடத்தப்பட்ட இந்த கலை விழாவில் நடனம் பாட்டு ஓவியம் அடுப்பில்லாத சமையல் யோகா ரங்கோலி மாறுவேட போட்டி பாட்டு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற சிறப்பு குழந்தைகள் உட்பட அனைவரும் தங்களது முழு திறமைகளையும் வெளிப்படுத்தி போட்டியில் பங்கேற்றனர். கடந்த 17ஆம் தேதி தொடங்கிய இந்த கலை விழாவில் இறுதி நாளான இன்று போட்டிகள் நடைபெற்றன. 
இது குறித்து அறக்கட்டளையின் தலைவர் ஹேமா பிரைட் கூறுகையில், ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 2000 ரூபாயும் இரண்டாம் பரிசாக ஆயிரம் ரூபாயும் மூன்றாம் பரிசாக 500 ரூபாயும் வழங்கப்படுவதோடு போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பரிசுத் தொகைகள் வழங்கப்படும் என்றும், முடங்கி கிடக்கும் மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளை வெளியே கொண்டு வந்து அவர்களது முழு திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்த கலை விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருவதாகவும் இதன் இறுதிப்போட்டி சேலம் கோட்டையில் வரும் 26 ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மனவளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட இந்த கலை விழா அந்த பகுதியில் உள்ளவர்களையும் போட்டியில் கலந்து கொண்டவர்களையும் மிகுந்த மகிழ்ச்சியின் ஆழ்த்தியது என்பது மட்டும் நிதர்சனம்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: