வியாழன், 18 செப்டம்பர், 2025

பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி சேலத்தில் ஒரே சமுதாயத்தைச் சார்ந்த இரண்டு காதல் ஜோடிகள் பதிவு திருமணம். பெண் வீட்டார் தொடர்ச்சியாக தங்களுக்கு கொலை மிரட்டல் விடுவதாக புதுமண தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேதனை. இதுபோன்று காதல் திருமணம் செய்பவர்களுக்கு காவல் நிலையங்களில் இதற்கென ஒரு தனி குழு அமைத்து பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சி மாநில செயலாளர் ராம்ஜி தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி சேலத்தில் ஒரே சமுதாயத்தைச் சார்ந்த இரண்டு காதல் ஜோடிகள் பதிவு திருமணம். பெண் வீட்டார் தொடர்ச்சியாக தங்களுக்கு கொலை மிரட்டல் விடுவதாக புதுமண தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேதனை. இதுபோன்று காதல் திருமணம் செய்பவர்களுக்கு காவல் நிலையங்களில் இதற்கென ஒரு தனி குழு அமைத்து பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சி மாநில செயலாளர் ராம்ஜி தமிழக அரசுக்கு வலியுறுத்தல். 

சேலம் அழகாபுரம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்த். இதேபோல சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் பூஜா. திருமணத்திற்கான வயதை கடந்த இவர்கள் அதாவது மேஜர் என்று கூறலாம். கடந்த இரண்டு வருடங்களாக ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு காதலித்து வந்து பிறகு திருமணம் செய்வதற்காக இருவரும் தங்களது வீட்டாரிடம் கேட்டுள்ளனர். இதற்குப் பெண் வீட்டார் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வரவே பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்வதற்கான முயற்சியும் பெற்று வந்துள்ளது. இதனால் மணமடைந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி காதலித்த நபரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக வசந்தை நேரில் சந்தித்து தங்களது இல்லத்தில் நடந்தவற்றை கூறி திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி அலுவலகத்திற்கு தஞ்சமடைந்துள்ளனர். ராம்ஜி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஏற்கனவே சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாங்கள் இருவரும் மேஜர் என்றும் தங்களது வீட்டில் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் புகார் வழங்கியுள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இருவீட்டாரையும் அழைத்துப் பேசி எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பெண் வீட்டாரிடம் இருந்து பெண்ணுக்கு தொடர்ச்சியான எதிர்ப்பும் மிரட்டலும் வரவே இன்று தேசிய மக்கள் கட்சியின் மாநில செயலாளர் அறிவுறுத்தலின் பேரில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் தங்களது திருமணம் நடத்தி முறையாக பதிவு செய்தனர். இது குறித்து மனைவியை கரம் பிடித்த சந்தோஷத்தில் வசந்த் நம்மிடையே கூறுகையில்,
காவல்துறையினரின் விசாரணையில் பெண் வீட்டார் முன்பு தான் கரம் பிடித்த பூஜாவிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நான் காதலித்த நபர் வசந்த் அவர்களுடன் தான் செல்வேன் பெற்றோருடன் நான் இருக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியதை எடுத்து பெற்றோர்கள் காவல்துறையினரிடம் பெண்ணிற்கு இதன் பிறகு எந்த மிரட்டலும் விடமாட்டோம் எனக் கூறிவிட்டு தற்பொழுது கொலை மிரட்டல் விடுத்து வருவது தங்களுக்கு பாதுகாப்பை கேள்விக்குறியாகி உள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார்.
இதே போல காதல் கணவனை திருமணம் செய்து கொண்ட பூஜா நம்மிடையே கூறுகையில், மனதிற்கு விரும்பிய வரை திருமணம் செய்த தங்களுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் எனது பெற்றோரால் எனக்கு வந்து கொண்டிருப்பது எனது எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும் தமிழக அரசு தங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து இதுபோன்ற பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் தனது மனக்குமுறலை பகிர்ந்து கொண்டார். 
இவர்களின் இந்த பிரச்சனை குறித்தும் திருமணம் தொடர்பாகவும் தேசிய மக்கள் கட்சியின் தமிழ் நாடு மாநில செயலாளர் ராம்ஜி நம்மிடையே கூறுகையில், தமிழகத்தில் ஆங்காங்கே இது போன்று பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தாலும் கூட சேலம் மாநகரம் உட்பட மாவட்டத்திலும் நிகழ்ந்துள்ளதாகவும் இதற்கு தமிழக அரசு ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் தஞ்சம் அடையும்போது அவர்களுக்கென ஒரு குழு அமைத்து அவர்களுக்கான பாதுகாப்பை முழுமையாக வழங்கி திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் அவர்களுக்கு இதுபோன்ற எந்த ஒரு உயிர்கள் தொடர்பான அச்சுறுத்தலும் இருக்கக் கூடாது என்பதற்காக தனி கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தனது கோரிக்கையை முன் வைத்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: