சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
இரண்டு மற்றும் கனரக வாகன திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க டேஸ் கேமரா. சேலம் மாநகர தெற்கு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு.
பொதுவாக இரண்டு மற்றும் நான்கு சக்கர இது தவிர கனரக வாகனங்கள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருட்களுடன் கடத்தப்படுவதும் திருடப்படுவதும் வழக்கமாகவே உள்ளது. இதனை தடுக்கும் நோக்கில் போக்குவரத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போதிலும் கூட இதுபோன்று காணாமல் போன வாகனங்கள் பெரும்பாலும் காணாமல் போன வகையிலேயே தான் உள்ளது. இதனை தடுக்கும் நோக்கில் சேலம் மாநகர காவல் துறையின் தெற்கு போக்குவரத்து காவல்துறையின் சார்பில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம், இது தவிர கனரக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி சேலம் மாநகர காவல் துறையின் தெற்கு பிரிவு போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிட்டு தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜா, மோகன் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் தெற்கு பிரிவு காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் தங்களது பாதுகாப்பு வாகன பாதுகாப்பு உறுதி செய்திடவும், சாலை விதிகளை மதிக்க செய்யவும் எதிர்பாராத விபத்தில் காப்பீடு கோரிக்கை நிமித்தமும், திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல் நடப்பின் ஆதாரம் தரும் வகையிலும் காவல்துறை குற்றத்தினை விரைந்து கண்டுபிடிக்க ஏதுவாகவும் இதற்காக தங்களது வாகனத்தில் டேஸ் கேம் பொருத்தி போக்குவரத்து காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பை வணங்கிட வேண்டும் என்றும் ஆய்வாளர் கிட்டு வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி கேட்டுக்கொண்டார்.



0 coment rios: