சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் 31 வது கோட்ட திமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை. 2026 சட்டமன்ற தேர்தலில் திராவிட மாடல் ஆட்சி அமைந்து மீண்டும் தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற வேண்டும். கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அறிவுறுத்தல்.
சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வழக்கறிஞர் ராஜேந்திரன் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளையும் பொது மக்களையும் சந்தித்து வருகிறார். அதன் அடிப்படையில் சேலம் மத்திய மாவட்ட திமுகவின் 31 வது கோட்டத்திற்கு உட்பட்ட கோட்டை பகுதியில் இஸ்லாமிய கல்வி சங்கம் அருகே 31 வது கோட்டத்திற்கு உட்பட்ட முக்கிய திமுக நிர்வாகிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனையை மேற்கொண்டார். அப்பொழுது கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கிய அமைச்சர், 31வது கோட்டத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து, நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு பெரும்பான்மையான ஆதரவு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அவர், மேலும் நடத்து முடித்து துவக்கி வைக்கப்பட்ட பணிகள் குறித்தும் இன்னும் செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து பல்வேறு வாக்குறுதிகளை அளித்து கட்சி உறுப்பினர்களின் நலனையும் விசாரித்து மகிழ்ந்தார். இந்த நிகழ்வில், சேலம் மத்திய மாவட்ட திமுக பொருளாளர் கார்த்திகேயன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அமான் என்கின்ற நாஸர்கான், திமுக பிரமுகர் அஸ்மத் உல்லாகான், 31வது கோட்ட செயலாளர் இப்ராஹிம் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



0 coment rios: