சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
இறைதூதரின் பிறந்தநாள் விழா. சேலம் ஜலால்புராவில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு தப்ரூக்.
இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் 1500 ஆவது பிறந்தநாள் விழா. மிலாடி நபி என உலக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் இந்த திருநாளையொட்டி சேலத்தில் முக்கிய பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக சேலம் ஜலால் புறா பகுதியில் உள்ள ஷாஜலால்புரா சுன்னத் ஜமாத் மஜீத்தில் இன்று அதிகாலை சிறப்பு தொழுகை மேற்கொள்ளப்பட்டு பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் 5000க்கும் அதிகமான இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் தப்ருக் எனப்படும் அன்னதானமும் வழங்கப்பட்டன.
இதனை நீண்ட வரிசையில் காத்திருந்து இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் வெற்றிச் சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஜமாத் நிர்வாகிகள் பாரூக் மற்றும் கபீர் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.



0 coment rios: