S.K. சுரேஷ்பாபு.
அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கிய விவகாரம். கொங்கு மண்டலத்தில் அதிமுக தொலைந்து விட்டது. இனி எதிர்க்கட்சி தலைவர் என்ற வரிசையில் எடப்பாடியார் அமர முடியாது. சேலத்தில் அதிமுக தொண்டர் அணி ஒருங்கிணைப்பாளர் கடும் கொந்தளிப்பு.
அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையன் அவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு எதிரொலி. செங்கோட்டையன் அவர்களின் கருத்து அதிமுகவின் உடையது அல்ல எனக்கூறி, அதிமுக கட்சி அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் செங்கோட்டையன் கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் இன்னைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டவர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் இடையேயும், கட்சித் தொண்டர்கள் இடையேயும், மிகுந்த பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ள நிலையில், சேலத்தை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு குழு சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தினேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான இவர், தலைவர் எம்ஜிஆர் ஆல் உருவாக்கப்பட்ட கட்சி, பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்களால் பாதுகாக்கப்பட்ட கட்சி இன்று செங்கோட்டையன் அவர்களின் பதவி நீக்கத்தால் கொங்கு மண்டலத்தில் அதிமுக தொலைந்து விட்ட சூழல் உருவாகியுள்ளது என்றும் ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த நிலையில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் செங்கோட்டையன் அவர்களின் நீக்கத்தால், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது சொந்தத் தொகுதியில் டெபாசிட் இழப்பதோடு எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தையும் இழந்து விடுவார் என்ற தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்திய, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் தீவிர ஆதரவாளர் தினேஷ் ஓபிஎஸ் அவர்களை சந்திக்க தேனி மாவட்டம் புறப்பட்டார் அவசர அவசரமாக.



0 coment rios: