சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மேட்டுப்பட்டி தாதனூர் சிலோன் காலனியில் 45 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த சாலையை ஆக்கிரமிப்பு செய்து அடைப்பு. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு.
சேலம் அயோத்தியாபட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி தாதனூர் ஊராட்சிக்கு உட்பட்டது சிலோன் காலனி. பலதரப்பட்ட மக்கள் வசித்து வரும் இந்த பகுதியில் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இவர்கள் அதே பகுதியில் உள்ள முட்டை கடை பகுதியில் இருந்து மின்னம்பள்ளி சாலையை அடைவதற்கு அந்த பகுதியில் உள்ள வண்டிப்பாதை என்ற பகுதியை தான் பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து புகார் மனு வழங்குவதற்காக வந்திருந்தனர். சிலோன் காலனி பகுதியை சேர்ந்த லோகநாதன் கலைச்செல்வி மற்றும் கவிதா உள்ளிடோர் அந்த மனுவில் தங்களது பகுதியில் வசித்து வரும் மாற்று சமுதாயத்தைச் சார்ந்த கணேசன் என்பவரது மகன் சிங்கமுத்து என்பவர் வண்டிப் பாதையில் மரங்களை வெட்டி போட்டும் பாறைகளை பாதையில் போட்டும் அடைத்து இரண்டாவது முறையாக வண்டி பாதையை அடைக்க முயன்று வருவதாகவும், இது தொடர்பாக காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தும் காவல்துறையினர் சிவில் பிரச்சனையாக உள்ளது தாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டதாகவும் இதனால் இந்த பகுதியில் ஜாதி பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தங்களது குழந்தைகள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கும் வேலைக்கு செல்வதற்கும் பாதையாகவும், தங்களது ஊரில் இறப்பு ஏதேனும் ஏற்பட்டால் நல்லடக்கம் செய்வதற்கும் ஊர் திருவிழா காலங்களில் சக்தி அழைத்தல் அழகு குத்துதல் போன்ற நிகழ்வுகளை மின்னாம்பள்ளி சாலையில் உள்ள அடி குழாய் தண்ணீர் பைப்பில் இருந்து தொடங்கி இந்த நடைபாதை வழியாகத்தான் வெகு சிறப்பாக கொண்டாடி கோவிலை சென்றடைவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்த மனுவில் யார்கேனும் உடல்நல குறைவு ஏற்பட்டால் காரிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் விரைவாக செல்வதற்கும் காரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் தங்களது பகுதிக்கு வருவதற்கும் காலம் காலமாக இந்த வண்டிப்பாதையை தான் பயன்படுத்தி வருவதாகவும் இந்த பாதையை தடுக்க முயற்சி செய்து வரும் கணேசன் என்பவரது மகன் சிங்கமுத்து என்பவர் மீது உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உடனடியாக அடைக்கப்பட்டுள்ள சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டியும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
0 coment rios: