சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் கொங்கணாபுரம் கட்சிப்பள்ளி ஏரிக்கு விரைவாக காவிரி உபரிநீரில் திறந்து விட வேண்டும். காவிரி சரபங்கா உபரி நீர் விவசாயிகள் நலச் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு.
காவிரி சரபங்கா உபரி விவசாயிகள் நல சங்கத்தினர் அதன் மாநில தலைவர் வேலன், வழக்கறிஞர் ரவிக்குமார், மாநில செயலாளர் மணி மற்றும் எடப்பாடி ஒன்றிய தலைவர் மாரிமுத்து உள்ளிட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்குவதற்காக வந்திருந்தனர். அந்த மனுவில் சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ள கச்சுப்பள்ளி ஏரி, அய்யம்பாளையம் ஏரி, கோர குத்தப்பட்ட ஏரி, மற்றும் கோரணம் பாளையம் ஏரி ஆகிய ஏரிகளுக்கு காவிரி உபரி நீரில் வரும் வாய்க்கால் பணிகள் 100 சதவீதம் நடைபெற்று முடிந்த நிலையில் உபரி நீர் திறக்க நீர்வளத்துறை அதிகாரிகள் காலதாமதம் ஏற்படுத்துவதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடையே காவிரி நீர் வராமல் போய்விடுமோ என ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட காலம் மட்டுமே வரும் இந்த உபரி நீரை எதிர்பார்ப்போடு காத்திருக்கும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்காமல் காவிரி உபரி நீரை வெள்ளாளபுரம் துணை நீரேற்றும் நிலையத்திலிருந்து நீரை பம்பிங் செய்திட சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட ஆவண செய்து விரைவில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்குமாறு கணம் மாவட்ட ஆட்சியர் அவர்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாகவும் அந்த மனுவில் விவசாயிகள் குறிப்பிட்டிருந்தனர். மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தா தேவி இன்று மாலைக்குள் தண்ணீரை திறந்து விட நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாக தெரிவித்ததன் அடிப்படையில் மனு கொடுக்க வந்திருந்த விவசாயிகள் அனைவரும் திரும்பச் சென்றனர்.
0 coment rios: