சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் அம்மாபேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து புதிய குடிநீர் இணைப்பு மற்றும் சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான ஆணைகளை வழங்கினார்.
தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக முழுவதும் மாவட்டங்கள் தோறும் முகங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சேலம் அம்மா பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 34-வது கோட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கு உட்பட்ட மக்களுக்கான சிறப்பு முகாம் சேலம் அம்மாபேட்டை சித்தேஸ்வரா பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமினை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். முகாமில்
சேலம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் இளங்கோவன், அம்மாபேட்டை மண்டல குழு தலைவர் தனசேகரன் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படக்கூடிய உதவி திட்டங்களுக்கான விண்ணப்பங்களை பெற்று ஆர்வத்துடன் பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் கொடுத்தனர். இதில் அதிகப்படியாக மாதாந்திர மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களே அதிக அளவில் விநியோகிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய தீர்வு ஏற்படுத்தி புதிய குடிநீர் இணைப்புகள் மற்றும் சொத்து வரி பெயர் மாற்றம் செய்ததற்கான ஆணைகளை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆணையாளர் இளங்கோவன், மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோவன் மற்றும் அம்மாபேட்டை மண்டலகுழு தலைவர் தனசேகரன் உள்ளிட்டோர் வழங்கினர். இந்த சிறப்பு முகாமில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.



0 coment rios: