சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மெக்சி கேப் வாகனங்களை மினி பேருந்துகளாக இயக்க தமிழக அரசு முடிவு. மலை கிராம மக்களின் போக்குவரத்தை எளிமை படுத்த அரசு மேற்கொண்டுள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களை போலவே தனியார் பேருந்துகளும் மினி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக பொதுவாக அரசு பேருந்துகளாகட்டும் தனியார் பேருந்துகளாகட்டும் ஒரு மலைப்பிரதேசம் என்றால் அதன் மையப் பகுதிக்கு மட்டுமே செல்லும். ஆனால் சம்பந்தப்பட்ட அந்த மலைப்பிரதேசத்தில் அந்த மையப் பகுதியை சுற்றிலும் ஏராளமான மலை கிராமங்கள் இருக்கத்தான் செய்கிறது. இதுபோன்று மலை கிராமங்களில் வசித்து வரும் மலை கிராம மக்களுக்கு போக்குவரத்து என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. தற்பொழுது மழை கிராம பகுதிகளிலும் போக்குவரத்தை எளிமைப்படுத்தி, மலை கிராம மக்களும் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு தனியார் மேக்சி கேப் வாகனங்களை மலைப்பிரதேசங்களில் போக்குவரத்தை இளிமைப்படுத்த மினி பேருந்துகளாக இயக்கம் திட்டத்தினை இன்று அறிவித்தது.
மலை கிராம மக்களின் போக்குவரத்தை எளிமைப்படுத்துவதற்காகவும் மலைப்பிரதேசங்களில் போக்குவரத்தை சீர்படுத்துவதற்காகவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 2000 மினி பேருந்துகள் ஒப்படை உள்ளதாகவும், இதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலும் அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த திட்டத்தை சேலம் மாவட்ட மேக்ஸி கேப் உரிமையாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட மேக்சி கேப் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரபு நம்மிடையே கூறுகையில், மலைப்பிரதேசங்களில் குறிப்பாக மலை கிராம மக்களின் போக்குவரத்தை இளமை படுத்துவதற்காக மேக்ஸி கேப் வாகனங்களை மினி பேருந்துகளாக மாற்ற மேற்கொண்டுள்ள தமிழக அரசின் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது என்றாளுமே கூட எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்பது தங்களுக்கு தற்பொழுது வரை விளங்கவில்லை என்று குறிப்பிட்டார். 12 சீட்டுகள் மட்டுமே கொண்டு மேக்சி கேப் வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே நாங்கள் சீட் பர்மிட் அதிகப்படியாக வேண்டுமென்று தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் தற்பொழுது வரை தங்களுக்கு சீட் பர்மிட் என்பது வழங்கவில்லை என வேதனை தெரிவித்த அவர், கர்நாடகா கேரளா மற்றும் புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் மேக்சி கேப் வாகனங்களுக்கு சீட் பர்மிட் வழங்கப்பட்டுள்ளது போல தமிழகத்திலும் வழங்க வேண்டும் என்றும் மாறாக 12 சீட்டுகள் கொண்ட மேக்சி கேப் வாகனத்தில் நின்று கொண்டு பயணிக்க கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே உள்ளது இது மலைப்பிரதேசத்தில் மிகவும் கண்டித்துடன் கடைபிடிப்பார்கள் என்பதால் 12 சீட்டுகளைக் கொண்டு மினி பேருந்து இயக்குவது சாத்தியமற்றது என்பதும் தங்களுக்கு கட்டுபடியாகாது என்றும் தெரிவித்த பிரபு, ஏற்கனவே வாகன உதிரி பாகங்கள் உயர்வு ஜிஎஸ்டி வரி டேக்ஸ் வரி இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளால் தொழில் நலிவடைந்துள்ள நிலையில் 12 சீட்டுகளை கொண்டு மினி பேருந்துகளை இயக்க வேண்டும் என்றால் எப்படி தங்களுக்கு கட்டுப்படியாகும் என்று கேள்வி எழுப்பிய இத்துடன் 12 சீட்டுகளுக்கும் அதிகமாக சீட் பர்மிட் வழங்கினால் மட்டுமே இந்த திட்டம் எந்த நோக்கத்திற்காக தமிழக அரசு கொண்டு வந்ததோ அப்பொழுதுதான் இந்த திட்டமானது பயனாளர்களுக்கு முழுமையாக சென்று அடையும் ஆகவே தமிழக அரசு இந்த திட்டம் அறிவித்துள்ளார்கள் செயல்படுத்துவதற்கு முன்பாக ஒவ்வொரு மேக்ஸி கேப் வாகனத்திற்கும் கூடுதலாக சீட் பெர்மிட் வழங்க வேண்டும் என்பது மட்டுமே சேலம் மாவட்ட மேக்சி கேப் வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையாக உள்ளது. செயல்படுத்தப்பட உள்ள திட்டம் குறித்து வாகன உரிமையாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
0 coment rios: