சனி, 13 செப்டம்பர், 2025

சேலம் மாவட்ட கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கலை விழிப்புணர்வு பேரணி...மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, தொடங்கி வைத்தார்...

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்ட கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கலை விழிப்புணர்வு பேரணி...
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, தொடங்கி வைத்தார்...

மேளதாளம் முழங்க தாரை தப்பட்டை உடன், தெருக்கூத்து கலைஞர்கள் நாடக கலைஞர் இசை கலைஞர் கரகாட்ட கலைஞர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை, சேலம் மண்டலம் மற்றும் பிற கலை அமைப்புகளுடன் இணைந்து கலை விழிப்புணர்வு பேரணி நடெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியானது. சேலம் மண்டலத்திற்குட்பட்ட அனைத்து கலைஞர்களும் கலைக்குழுக்களை பதிவு செய்யும் வகையில் மாவட்டங்களில் நிகழும் கலை நிகழ்ச்சிகளுக்கு வாய்ப நாட்டுப்புறக் கலைப்பயிற்சி, கலைக்குழுக்கள் பதிவு, நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் மாவட்டக் கலை மன்றம், ஆகிய அமைப்புகளைப் பற்றி கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் எழுதப்பட்டு சுமார் 2000 நபர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர். 
இப்பேரணியில் கலை அமைப்புகளான தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம், நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கம், நாதஸ்வரம் தவில் இசைக்கலைஞர்கள் சங்கம். தமிழ்ச்சங்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தெருக்கூத்து, பம்பை, சிலம்பம், கோல்கால் ஆட்டக் கலைஞர்கள் ஆகியோர் இணைந்து ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இப்பேரணியானது மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து புறப்பட்டு திருவள்ளுவர் சிலை வழியாகச் சென்று, அருள்மிகு இராஜகணபதி கோயிலில் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு செய்யப்பட்டது. சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட திசை கலைஞர்களும் தெருக்கூத்து கலைஞர்களும் கரகாட்டம் ஒயிலாட்டம் உள்ளிட்ட நடன கலைஞர்களும் கலந்து கொண்டு மேளதாளங்கள் முழங்க தாரை தப்பட்டை உடன், பல்வேறு வேடங்கள் அணிந்து கரகாட்டம் ஒயிலாட்டம் என மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் திருவிழா கோலமாக காட்சி அளித்தது.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: