ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

திமுகவிற்கு எதிராக தவெக தலைவர் விஜய் கூறி வரும் குற்றச்சாட்டுகள். திமுக ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றும் பதில் கூறி நேரத்தை வீணடிக்கவில்லை என்றும் சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒரே போன்று அந்த கட்சியின் தலைவருக்கு அலட்சியமான பதில்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

திமுகவிற்கு எதிராக தவெக தலைவர் விஜய் கூறி வரும்  குற்றச்சாட்டுகள். திமுக ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றும் பதில் கூறி நேரத்தை வீணடிக்கவில்லை என்றும் சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒரே போன்று அந்த கட்சியின் தலைவருக்கு  அலட்சியமான பதில்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாமினை தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி  ஸ்டாலின் அவர்கள் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதற்கட்ட பணியினை துவக்கி வைத்தார். இது தொடர்பாக சேலத்தில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி எம் செல்வகணபதி ஆகியோர் தனித்தனியாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது சேலம் ஒருங்கிணைந்த திமுகவின் தலைமை அலுவலகமான கலைஞர் மாளிகையில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். 
அப்போது பேசிய அவர், தமிழர்களின் பண்பாட்டை சீர்குள் வைக்கும் விதமாக இந்தி திணிப்பு நீட் போன்ற நியாயமற்ற தேர்வுகள் பொது தொகுதி மறு வரையறை சதி என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கொண்டு மத்திய அரசு திட்டமிட்டு தமிழகத்தை வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டிய சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன், திமுக நிர்வாகிகளின் தீவிர முயற்சியின் காரணமாக சேலம் மத்திய மாவட்டத்தில் 1200 வாக்குச்சாவடி மையங்களில் கலந்து 20 நாட்களில் இரண்டு லட்சத்திற்கும்  அதிகமான பொதுமக்களை  சந்தித்து ஆறு லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளதாகவும், இரண்டாம் கட்ட பணிகள் செப்டம்பர் 15ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் தமிழகத்தை தலைகுனிய விட மாட்டேன் என்ற தலைப்பில் 1343 வாக்குச்சாவடி மையங்களில் இன்றும் இதில் முதற்கட்ட பணியின் போது சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் பங்கு பெற உள்ளதாகவும், இந்த உறுதிமொழி ஏற்பு கூட்டங்களில் தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்கின்ற தலைப்பில் பத்துக்கும் மேற்பட்ட காரணிகளை கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், இதனை பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நிகழவருக்கும் இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடைபெறும் என்று கூறிய அவர் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் அரசு விழாவிற்காக வரும்போது ரோடு ஷோ உள்ளிட்ட வேறு நிகழ்ச்சிகள் செய்யவும் கால சூழலுக்கு ஏற்ப திட்டமிட்டு வருவதாக கூறிய சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன், புதிதாக கட்சி தொடங்கியுள்ள திரைப்பட நடிகர் விஜய் சமீபகாலமாகவே திமுக அரசை விமர்சித்து கூறிவரும் பல்வேறு கருத்துக்களை திமுக ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றும் சேலம் செய்தியாளர்களிடையே அலட்சியமாக தெரிவித்தார். 
இதேபோன்று, சேலம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டி எம் செல்வகணபதி தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஓர் அணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாமில் சேலம் மேற்கு மாவட்டத்தை பொருத்தவரை சங்ககிரி ஓமலூர் மற்றும் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 3.66 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு 44% பேர் திமுகவில் சேலம் மேற்கு மாவட்டத்தில்  இணைக்கப்பட்டுள்ளதாகவும் 956 வாக்குச்சாவடி மையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மாலை 5 மணி முதல் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக டிஎம் செல்வகணபதி தெரிவித்ததோடு, நடிகர் விஜய் திமுக மீதான விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு அவரது கேள்விகளுக்கு பதில் கூறி தங்களது நேரத்தை தாங்கள் வீணடிக்க விரும்பவில்லை என்று மிகவும் நக்கலாக பதில் கூறினார். 
ஆக சேலத்தை பொறுத்தவரை தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜயின் கருத்துக்கள் குறித்து அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் நாட்களாக பதில் கூறியது ஒரு கட்சியின் தலைவரை பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
        

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: