கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அன்புமணி தலைமையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் கடிதமும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டன.
அந்த தீர்மானங்களை அடிப்படையாக கொண்டு, பாமக தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாசின் பதவிக்காலத்தை 2026 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
இந்த முடிவை வரவேற்று, ஈரோடு மாநகர் மாவட்ட பாமக சார்பில் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ராஜ் தலைமையில் மத்திய பேருந்து நிலையத்தில் பட்டாசுகள் வெடித்தும், பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.



0 coment rios: